ஆழ் கூள மேலாண்மை

  • மண் தரையினை விட ஆழ்கூளத் தரை கோழிகளைப் பராமரிப்பதற்கு ஏற்றது. ஒவ்வொரு முறையும் கோழிகளை விடுவதற்கு முன்பாக கிருமி நீக்கம் செய்வதற்கு மிக ஏற்றது
  • கோழிகளைக் கொட்டகையில் விடுவதற்கு முன்பாகக் கோழிகளின் கொட்டகைத் தரையில் 3-5 இஞ்ச் உயரத்திற்குப் போட வேண்டும். பிறகு கோழிகளை விட்ட பிறகும் ஆழ்கூளத்தினைக் கொட்டகையில் போடலாம். ஆழ்கூளம் 8-12 இஞ்ச் உயரம் வரும் வரை ஆழ்கூளத்தினைத் தரையில் போடலாம்.
  • ஆழ்கூளத்தினைப் புதிதாக சேர்ப்பதற்கு முன்பாக பழையதாக இருக்கும் ஆழ்கூளத்திலுள்ள கட்டிகளை உடைத்து விட வேண்டும்.
  • ஆழ்கூளத்தில் கட்டிகள் ஏற்படுவதைத் தடுக்க அடிக்கடி ஆழ்கூளத்தைக் கிளறி விட வேண்டும்.
  • ஆழ் கூளத்தைக் கிளறும் போது அமோனியா வாயு வெளியேறுவதைத் தடுக்க மரத்தூள் மற்றும், சூப்பர் பாஸ்பேட் உரத்தினை 4;1 என்ற விகிதத்தில் கலந்து 10 சதுர மீட்டர் இடத்தில் 5 கிலோ என்ற அளவிற்குப் போட வேண்டும்.
  • ஆழ்கூளத்துடன் சுண்ணாம்பினைச் சேர்ப்பதால், அதிலிருந்து அதிகப்படியான அமோனியா வாயு வெளியேறும். இதனால் ஆழ் கூளத்தில் அதிகப்படியாக கோழிகளைப் பாதிக்கும் ஈ. கோலை எனும் பாக்டிரியா கிருமி வளர்ந்து விடும். எனவே ஆழ்கூளத்தில் சுண்ணாம்பு சேர்ப்பதைத் தடுக்கவேண்டும்.
  • ஆரம்பத்தில் ஆழ்கூளத்தில் 12% ஈரப்பதம் மட்டுமே இருக்கும். கோழிக் கொட்டகையில் குறைந்த காற்றோட்டம், அதிக எண்ணிக்கையிலான கோழிகளை ஓரிடத்தில் வைத்திருத்தல், ஈரப்பதம் அதிகமாக இருத்தல் போன்ற காரணங்களால் ஆழ்கூளத்தில் 30 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும். ஆனால் எச்சத்தை உரமாக்கும் பாக்டீரியாக்கள், ஆழ்கூளத்தின் ஈரப்பதம் 30%க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே வேலை செய்யும்.
  • கோழிகளின் எச்சம் மற்றும் ஆழ்கூளம் சேர்ந்து கோழிகளுக்கு வெதுவெதுப்பான சூழ்நிலையினை கொட்டகையில் அளிக்கும்
  • குளிர்காலத்தில் ஆழ்கூளத்தின் உயரம் 10-12 இஞ்ச் அளவும், வெயில் காலத்தில் 2.5 முதல் 4 இஞ்ச் உயரம் வரையும் பராமரிக்கலாம்.

ஆழ்கூள முறை வளர்ப்பில் சத்துகளைம் மறுசுழற்சி முறையில் உபயோகப்படுத்துதல்

  • கோழிகளின் எச்சம் ஆழ்கூளத்துடன் கலக்கும் போது, அதில் ரசாயன மற்றும் பாக்டீரிய செயல்பாடுகள் காரணமாக ரைபோபிளேவின் (வைட்டமின் பி2) உற்பத்தி செய்யப்படுகிறது.
  • இதனால் ஆழ்கூளத்தில் நியாசின், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், கால்சியம் போன்ற சத்துகளும் இருக்கும்.
  • இவ்வாறு உருவான ஆழ்கூளத்தினை கோழிகள் கொத்தும் போது, சிறிதளவு ஆழ்கூளத்தினை உண்டு விடும். இதனால் ஆழ்கூளத்திலுள்ள சத்துகள் கோழிகளுக்குக் கிடைத்து விடும். இதற்கு சத்துகளை மறுசுழற்சி முறையில் உபயோகப்படுத்துதல்.
  • ஆழ்கூளத்தில் பராமரிக்கப்படும் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் மேற்கூறிய சத்துகள் குறைவாக இருந்தாலும், ஆழ்கூளத்திலிருந்து சத்துகள் கிடைத்து விடுவதால், அவை எந்த விதமான சத்துப் பற்றாக்குறை அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை.
  • ஆனால் கூண்டு முறை வளர்ப்பில் இவ்வாறு சத்துகளை மறு சுழற்சி செய்ய வாய்ப்பில்லை.
  • எனவே கூண்டு முறையில் கோழிகளை வளர்க்கும் போது அவைகளின் தீவனத்தில் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் போன்ற அனைத்து சத்துகளும் தீவனத்தில் போதுமான அளவு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நல்ல ஆழ்கூளப் பொருட்களின் குணநலன்கள்

  • கோழிகளின் எச்சத்திலுள்ள ஈரப்பதத்தை நன்றாக உறிஞ்சிக் கொள்ள வேண்டும்
  • அதே சமயத்தில் ஈரப்பதத்தை எளிதில் வெளியேற்றி, உலர்ந்து விட வேண்டும்
  • கட்டிகளாக மாறும் திறன் குறைவாக இருக்க வேண்டும்.
  • பூஞ்சைகளின் வளர்ச்சி இல்லாமல் இருக்க வேண்டும்.
  • கூர்மையான பொருட்கள் மற்றும் இதர தேவையற்ற பொருட்கள் இருக்கக்கூடாது.
  • நச்சுத்தன்மையற்றதாகவும், அமுங்கும் தன்மை உடையதாகவும், எந்த விளைவையும் ஏற்படுத்தாததாகவும் இருக்க வேண்டும்
  • விலை குறைவாகவும், அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்
  • இயற்கையாக மக்கும் திறனுடையதாகவும், கோழிகளுக்கு சில சத்துகளை அளிக்கக்கூடியதாகவும், நல்ல உரமாகும் தன்மை உடையதாகவும் இருக்கவேண்டும்
  • நடுத்தரமான அளவுடைய தூளாகவும், மென்மையாகவும், குறைவான எடை உடையதாகவும் இருக்கவேண்டும்
  • ஆழ்கூளத்தின் தரத்தை ஒரு கையளவு எடுத்து நன்றாக இறுக்கி மூட வேண்டும். பிறகு கையினை விரிக்கும் போது அது பந்து போல் ஆகாமல் இருக்க வேண்டும்.
  • ஆனால் ஆழ்கூளம் மிகவும் உலர்வாகவும் இருக்கக்கூடாது. மிகவும் உலர்வாக இருந்தால் கொட்டகையில் தூசு அதிகமாக இருக்கும்

  •  மேலே செல்க